ஐசரி கணேஷின் தயாரிப்பில் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள  ‘சுமோ’ திரைப்படம் நவம்பரில் வெளியாக இருக்கிறது!

வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் “சுமோ”. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் Dr.. ஐசரி k கணேஷ் தயாரித்துள்ளார். எஸ் .பி ஹோசிமின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தோ-ஜப்பானிஸ் படமான ‘சுமோ’ சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  முதல் இந்தியத் திரைப்படம். ஜப்பானில் பாடல் காட்சிகள் & படபிடிப்பு நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் படபிடிப்பு அங்கே நடத்தி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்திருக்கிறார். வழக்கம்போல் யோகி பாபுவின் நகைச்சுவை இந்த படத்திலும் கலைக்கட்டியுள்ளது குழந்தை முதல் வயதானவர் வரை ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான திரைப்படம் இது.

நடிகர் சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக  திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது .இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  திரைக்கு வர இருக்கிறது .

நடிகர்கள் :

மிர்ச்சி சிவா ,
பிரியா ஆனந்த் ,
யோஷினோரி  தாஷிரோ ,
வி டி வி கணேஷ் ,
யோகிபாபு .

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – எஸ். பி ஹோசிமின்

தயாரிப்பு : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்- Dr.  ஐசரி K கணேஷ்

நிர்வாக தயாரிப்பு : K.அஷ்லின் குமார்

திரைக்கதை & வசனம் – மிர்ச்சி  சிவா

ஒளிப்பதிவு : ராஜிவ் மேனன்

இசை – நிவாஸ் கே பிரசன்னா

படத்தொகுப்பு – பிரவீன் கே .எல்  

கலை இயக்கம் : கார்த்திக்

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மது