ஐபிஎல் நேரத்தில் பிரமாண்ட மைதானத்திற்கு செல்லும் நடிகர் விஜய்

ஏ.ஜி.எஸ் என் டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 63’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், படத்தின் முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பிறகாக சென்னை அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் அமைத்து வருகின்றனர். அடுத்த 50 நாட்களுக்கு இங்குதான் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதற்காக நடிகர் விஜய் தயாராகி வருகிறார்.