ஒத்த செருப்பு’ படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் – சூப்பர் ஸ்டார்
நடிகர் இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு திரை பிரபலங்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்து செய்தியில், பார்த்திபனின் அபார முயற்சிக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற வேண்டும் என்றும், அதற்காக இந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.