ஒரு செருப்பு வந்து விட்டது, இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் – கமல்ஹாசன்
பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் ஷங்கர், கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கமல் “காந்தி ரயிலில் சென்று கொண்டு இருந்த போது அவரது ஒரு செருப்பு கீழே விழுந்துவிட்டது. அதை ஒரு பெண் எடுத்துச் சென்றார். அந்த சமயம் காந்தி மற்றொரு செருப்பையும் கழற்றிவிட்டார். ஒரு செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் தான் இன்னொரு செருப்பையும் கழற்றிவிட்டேன் என்று காந்தி கூறினார். நான் காந்தி ரசிகன். நான் சென்ற இடத்தில் என் மீது ஒரு செருப்பு வீசினர். இன்னொரு செருப்பும் என்னை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கிறேன். மற்றொரு செருப்பு விரைவில் கிடைக்கும். அதற்கான தகுதி எனக்கு உண்டு. செருப்பை போட்டவருக்கு தான் அவமானம்” என்று கமல் கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசனுக்கு நடிகர் பார்த்திபன் செங்கோல் ஒன்றை பரிசளித்தார். நடிகர் கமல் பேசிய காணொளி இணைப்பு👇🏽