ஒரு நல்ல தலைமை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேவைப்படுகிறது ஆர்.கே.செல்வமணி பேச்சு.

சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் ஐஆர்8 திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் திரைப்படக் குழுவினருடன், பெப்ஸி தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள்  கலந்து கொண்டனர்.

ஐஆர்8 திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
மேடையில் பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி 

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றது தொடர்பாக சில கருத்துக்களை முன்வைத்து பேசினார். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திரைத்துறையின் மூலமாக வருடத்திற்கு ரூ. 4000 கோடி வரை லாபம் ஈட்டுகிறது.

செயல்பட்டு வருகிறது. விவசாயத்தை போலவே சினிமாவும் அழிவை நோக்கி போகிறது.

மேலும், விவசாயத்தை காப்பாற்ற விவசாயிக்கு கடனோ, மானியமோ தேவையில்லை. அவர்கள் உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை தந்தால் மட்டும்மே போதும். விவசாயம் விவசாயிகள் பிழைத்துக் கொள்வார்கள் என்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார்

அப்போது அவரிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவது குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், தற்போதைய தலைமை சிறப்பாக இருந்தாலும், செயல்பாடுகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டியது இருக்கிறது. இன்னும் ஒரு நல்ல தலைமை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேவைப்படுகிறது என்று கூறினார்