ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த பிரகாஷ்ராஜ்

 

பெங்களூர் : கர்நாடக மாநிலம், மைசூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பிரதாப் பிம்ஹா, கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜ் குறித்து ட்விட்டரில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், விளக்கம் கேட்டு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரகாஷ்ராஜ் மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.
பாஜக எம்.பி தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை விமர்சித்தது பிரகாஷ்ராஜை கோபப்படுத்தியது. ‘தர்க்க ரீதியாக எனக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள்’ என்றார். மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினார். பதில் இல்லை ஆனால், பிரகாஷ்ராஜ் அனுப்பிய நோட்டீசுக்கு, பிரதாப் சிம்ஹா எந்தவித பதிலும் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா மீது மைசூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு ரூபாய் நஷ்ட ஈடு அதில் தன்னைப் பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா, உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். தவிர, தனக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் மட்டும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.