ஒரு வழியாக ஓட்டு போட்ட சிவகார்த்திகேயன்

சென்னையில் வாக்காளர் பட்டியலில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கரின் பெயர்கள் இல்லை. இந்நிலையில் தான் வாக்களித்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக பரபரப்பாகவும் நடந்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் உள்ளிட்டோர் காலையிலேயே வாக்களித்துள்ளனர். சிவகார்த்திகேயன் ஏன் இன்னும் வாக்களிக்கவில்லை என்று பார்த்தால் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் வாக்களித்து விட்டதாக புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.