ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தால் மறுக்காதீர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் சர்ச்சை பேச்சு
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. எஞ்சிய 2 கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்”பிற அரசியல் கட்சிகள் உங்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தால், மறுக்காதீர்கள் பணத்தை வாங்கி கொள்ளுங்கள். ஆனால் உங்கள் ஓட்டை ஆம் ஆத்மி சின்னமான துடைப்பம் சின்னத்திற்கு போடுங்க” என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.