கங்கனா ரணவத் நடிக்கும். படத்திற்கு பட்ஜெட் நூறு கோடியாம்’

தமிழ் சினிமாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கப் போவதாக ஒரே சமயத்தில் இரண்டு அறிவிப்புகள் வெளியாகின. ‘தலைவி’ என ஒரு படமும், ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் மற்றொரு படமும் அறிவிக்கப்பட்டன. ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். ‘தலைவி’ படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்க உள்ளார்.

‘தலைவி’ படத்தை இயக்குனர் விஜய் இயக்க உள்ளார். இவரது இயக்கத்தில் இப்படத்தில் நடிப்பதற்காக கங்கனாக ரணவத் தமிழ் கற்று வருகிறாராம். மேலும், ஒல்லியாக இருக்கும் கங்கனா கொஞ்சம் குண்டான தோற்றத்தைப் பெறுவதற்காக உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளாராம்.

படத்தின் பட்ஜெட்டாக 100 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனமான விபிரி ஒதுக்கியுள்ளது என்றும் சொல்கிறார்கள். இந்நிறுவனம்தான் தெலுங்கில் ‘என்டிஆர்’ படத்தின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகங்களாகத் தயாரித்து பெரும் நஷ்டமடைந்தது. அப்படியிருக்கையில் ‘தலைவி’ படத்திற்காக 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பார்களா என்பது சந்தேகம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். ஜுலையில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.