கடாரம் கொண்டான்’ கதாபாத்திரங்களில் பெயர்கள் குறித்த தகவல்
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ வருகின்ற 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்களின் கதாபாத்திரத்தின் பெயர்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, கேகே கதாபாத்திரத்தில் விக்ரமும், ஆதிரா கதாபாத்திரத்தில் அக்சராஹாசனும், வாசு கோபாலன் கதாபாத்திரத்தில் அபிஹாசனும், நந்தா கதாபாத்திரத்தில் சித்தார்த்தும், உமர் அகமது கதாபாத்திரத்தில் ரவீந்திராவும், நவீன் கதாபாத்திரத்தில் மலேசியா புரவாளனும், கேத்ரின் வில்லியம்ஸ் கதாபாத்திரத்தில் செர்ரியும் வின்செண்ட் கதாபாத்திரத்தில் விகாசும், கல்பனா கதாபாத்திரத்தில் லேனாவும், அமல்தாஸ் டேவிட் கதாபாத்திரத்தில் ராஜேஷ்குமாரும் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.