கடாரம் கொண்டான்’ திரைப் படத்திற்கு மலேசியா அரசு தடை விதித்துள்ளது
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அங்கு படம் ரிலீசாகவில்லை. மலேசிய அரசு இந்த படத்திற்கு சென்சார் சான்று தரவில்லையாம். இந்த படத்தின் கதைப்படி மலேசியாவில் திருடனாக இருக்கும் விக்ரம், மலேசியா போலீசார்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்து செல்வது போல் இருக்கும். எனவே தங்கள் நாட்டு போலீஸை தவறாக இந்த படத்தில் சித்தரிப்பதாக கூறி மலேசிய சென்சார் போர்டு இந்த படத்தை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டதாம். இதனால், மலேசியாவில் இந்த படம் வெளியாகாததால் இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.