கட்சிக்காரன் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5 / 5.
நடிகர் நடிகைகள் :- விஜித் சரவணன், அப்புக்குட்டி, ஸ்வேதா டாரதி, இயக்குநர் மருது பாண்டியன், ஜவகர், விஜய் கெளதம், சி.என். பிரபாகரன், வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன், சிவ சேனாதிபதி, ஏ.ஆர். தெனாலி,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ப. ஐயப்பன்.
ஒளிப்பதிவு :- மதன்குமார்.
படத்தொகுப்பு :- யு கார்த்திகேயன்.
இசை :- ரோஷன் ஜோசப் -C. M. மகேந்திரா.
தயாரிப்பு :- பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் – புளூஹில்ஸ் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- சரவணன் செல்வராஜ், மலர்கொடி முருகன்.
ரேட்டிங் :- 2.5 / 5
தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ அரசியல் சார்ந்த திரைப்படங்கள் வந்துள்ளது.
தோனி கபடி குழு’ லிரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ப.ஐயப்பன் தனது இரண்டாவது திரைப் படமான இந்த கட்சிக்காரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
முழுக்க, முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்த கட்சிக்காரன் திரைப்படம் உருவாகி உள்ளது.
ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் தனக்கான இழப்பீடு கேட்பதும்தான் கட்சிக்காரன் திரைப்படத்தின் கதையை இயக்குனர் ப. ஐயப்பன்.
இய்க்கி உள்ளார்.
வீடு மனைவி மக்கள் என்று பாராமல் கட்சி கட்சி என்று காலம் முழுக்க உழைத்து விட்டு அரசியல்வாதியின் நிஜமுகம் தெரியும்போது சலிப்படைந்து அரசியலில் இருந்து விலகி விடுவது பல உழைப்பாளி அரசியல் தொண்டர்களின் சோகக்கதை தான் இந்தக் கட்சிக்காரன் திரைப்படம்.
கதாநாயகன் விஜித் சரவணனின் தந்தை ஒரு கட்சியில் பல காலங்களாக விசுவாசமான தொண்டராக இருந்து வருகிறார்.
அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தனது அபிமானமிக்க தலைவருக்காக முழு விசுவாசத்துடன் அந்தக் கட்சிக்காக விசுவாசமான தொண்டராக மாறுகிறார் கதாநாயகன் விஜித் சரவணன்.
போஸ்டர் ஒட்டுவது ,கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது, கோஷம் போடுவது கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது ,விழாக்கள் ஏற்பாடு செய்வது என்று மும்மரமாக ஈடுபடுகிறான்.
இவற்றுக்கெல்லாம் செய்வதற்கு பணம் இல்லாத போது தனது மனைவியின் தாலியை அடகு வைக்கக் கூட தயங்குவதில்லை.
இப்படி இரவு பகல் பாராது தன் கட்சிக்கு உழைக்கிறார் கதாநாயகன் விஜித் சரவணன்.
அவனது உழைப்பைப் பாராட்டி தனது கட்சியில் இருந்து வரும் தேர்தலில் கதாநாயகன் விஜித் சரவணனுக்கு கவுன்சிலர் பதவியில் போட்டியிட தனது கட்சித் தலைவர் வாய்ப்பு தருகிறார்.
ஆனால் கடைசி நேரத்தில் எதிர்க்கட்சியிலிருந்து கட்சி மாறிய ஒருவனுக்கு அந்த கவுன்சிலர் நிற்க்க கூடிய வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
தனது கனவு சிதைந்து விட்டதே என்று எண்ணி ஏமாற்றப்பட்டவன்
சோர்வடைந்து விலகிவிடவில்லை.
யோசித்துப் பார்த்தபோது மெல்ல மெல்ல விழிப்புணர்வு பெறுகிறான்.
அவன் மனைவி அஞ்சலியும் அவனைச் சிந்திக்கத் தூண்டுகிறாள்.
ஏமாற்றியவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிறாள்.
ஆகவே உண்மைத் தொண்டன் கதாநாயகன் விஜித் சரவணன் ஏமாற்றப்பட்ட தன் கட்சி தலைவனிடம் நியாயம் கேட்டுப் போராடுகிறான் .
அது மட்டுமல்ல தன்னைப் போல ஏமாற்றப்பட்டவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு போராடுகிறான்.
அரசியல்வாதிகளின் மிரட்டல் போக்கால், அவன் கூட வந்தவர்கள் இடையில் கழன்று கொண்டாலும் அவன் உறுதியாக நிற்கிறான்.
இறுதியில் இந்த போராட்டத்தில் கதாநாயகன் விஜித் சரவணன் ஜெயித்தாரா? ஜெயிக்கவில்லையா? என்பதுதான் இந்த கட்சிக்காரன் திரைப்படத்தின் மீதி கதை.
இந்த கட்சிக்காரன் திரைப்படத்தில் விஜித் சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்தக் கட்சிக்காரன் கதாபாத்திரம் நம்மிடம் இருந்து அந்நியப்பட்டு வேறொன்று போன்று தோன்றாது.
திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண் முன்னே ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு கட்சிக்காகச் சுற்றித் திரியும் அப்பாவித் தொண்டர்களை அந்த கதாநாயகன் விஜித் சரவணன் கதாப்பாத்திரம் நினைவூட்டுகிறது.
இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகன் விஜித் சரவணனின் கிராமத்து மண்ணின் நிறத்தை எழுதி வைத்துள்ள அந்த அப்பாவி முகமும் வெள்ளந்தி குணமும் அவரை அந்த கதாபாத்திரத்தில் அழகாக பொருத்திக் இருக்கிறார்.
இந்த கட்சிக்காரன் திரைப்படத்தில் ஸ்வேதா டாரதி கதாநாயகியாக நடித்துள்ளார்.
அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்வேதா டாரதி அப்பாவி கட்சித் தொண்டனின் மனைவியாக மிகவும் சரியாகப் பொருந்துகிறார்.
நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைப் போராட்டத்தை, கவலைகளை முகத்தில் காட்டுகிறார்.
அந்தக் கிராமத்து முகமும் தோற்றமும் நேர்த்தியான அளவான அழகு, நடிப்பு சூப்பர்.
மக்கள் கட்சித் தலைவராக வரும் சிவ சேனாதிபதி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
கதாநாயகன் விஜித் சரவணனின் நண்பனாக வரும் தெனாலியும் நீள வசனங்கள் பேசி தனது அங்க சேட்டைகள் மூலம் ஆங்காங்கே சிரிப்பையும் வரவழைக்கிறார்.
கதாநாயகன் விஜித் சரவணன் பேச வேண்டிய வசனங்களை வாங்கி தெனாலி பேசி கைத்தட்டல் வாங்கினார்.
இசையமைப்பாளர் ரோஷன் ஜோசப் இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் ஒகே ரகம்.
C. M. மகேந்திரா பிண்ணனி இசை சுமர் ரகம்.
ஒளிப்பதிவாளர் மதன்குமார் அருமையாக இருக்கிறது.
யு கார்த்திகேயன் படத்தொகுப்பு ஓகேதான்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த என்னுயிர் தோழன் திரைப்படத்தை போல் கதை இருக்கிறது.
நல்ல கதையை எடுத்து கொண்ட இயக்குனர் நல்ல நடிகர்களை நடிக்க வைத்து காட்சிகளில் அழுத்தம் சேர்த்து எடுத்திருந்தால் முழுத்தகுதி உள்ள திரைப்படமாக அனைவரையும் கவர்ந்திருக்கும்.
மொத்தத்தில் கட்சிக்காரன் திரைப்படம் பெரிய நடிகர்களை வைத்து எடுத்து இருந்தால் அருமையாக இருந்திருக்கும்.