கண்களில் நீர் வரவழைத்த பெளவ் பெளவ் படவிழா
நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப்-ல் பெளவ் பெளவ் எனும் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் படத்தில் பங்குபெற்ற நடிகர், இயக்குநர் உள்பட அத்தனை கலைஞர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் திரையுலகின் ஜாம்பவான்களான அபிராமி ராமநாதன், சித்ரா லட்சுமணன், எடிட்டர் மோகன், பி.எல் தேனப்பன் என பலரும் கலந்து கொண்டனர். விழாவில் எடிட்டர் மோகன் நாய் எவ்வளவு நன்றியுள்ளது என்பதை பழைய நடிகர் தங்கவேலு வீட்டு நாய் செய்த ஒரு தியாகத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். அது பலரையும் கண்கலங்க வைத்தது. தங்கவேலு உடலில் இருந்த ரத்தத்தை தன் நாவால் துடைத்து நாய் உயிர்விட்ட அந்தத் தியாகச் சம்பவம் எல்லோர் மனதையும் அசைத்துப் பார்த்தது. இந்தப் பெளவ் பெளவ் படத்தில் நாய் தான் பிரதான பாத்திரம் என்பதால் படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். அபிராமி ராமநாதன் பேசுகையில், படத்தை வாழ்த்திப் பேசியதோடு டிஜிட்டல் உரிமைக்காக தியேட்டர்களை வஞ்சிக்காதீர்கள் என்ற வேண்டுகோளையும் வைத்தார்.
சித்ரா லட்சுமணன் தயாரிப்பாளர் நடராஜன் அவர்களின் தந்தை எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் உள்பட பல படங்களை தயாரித்தவர் என்பதை நினைவு கூர்ந்தார். மேலும் இந்த பெளவ் பெளவ் படத்தை நடராஜன் தயாரிக்கிறார் என்றால் நிச்சயம் படம் ரசனைக்குரியதாக இருக்கும் என்றும், அவர் ரசனைக்கு சாட்சியாக பலரும் வாங்கத் தயங்கிய முதல் மரியாதை படத்தை நடராஜன் துணிந்து வாங்கி லாபம் சம்பாதித்த கதையையும் சொல்லி நிகழ்ச்சியை கலகலக்க வைத்தார்