கண்ணே கலைமானே விமர்சனம்

இயக்குனர் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே படம் தொடக்கம் முதல் கமலக்கண்ணனாக வரும் விவசாயி உதயநிதி ஸ்டாலினின் நல்ல குணங்களை காட்டுகிறது. இவரது அப்பா பூ ராமுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டார். பாட்டியாக வடிவுக்கரசி வருகிறார். விவசாயிகள் தற்கொலை மற்றும் நீட் தேர்வு ஆகியவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கும் நல்ல குணம் கொண்ட ஒரு விவசாயியாக கமலக் கண்ணன் நடித்துள்ளார்.

மேலும், ஏழை விவசாயிகளுக்கு வங்கியிலிருந்து கடன் பெற்று தருகிறார். இந்த நல்ல குணம் காரணமாக உள்ளூரில் கூட்டுறவு வங்கியில் மேனேஜராக பணியாற்றி வரும் பாரதியாக நடித்துள்ள தமன்னாவுக்கு கமலக்கண்ணன் மீது காதல் வருகிறது.

இந்தக் காதலுக்கு கமலக் கண்ணனின் குடும்பத்தினர் குறிப்பாக வடிவுக்கரசி சம்மதம் தெரிவிக்கிறாரா? இல்லையா? பாரதி எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கேட்கிறார்? இது தான் படத்திற்கு பிளஸ், மைனசாக கூறப்படுகிறது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக இயக்குனர் சீனு ராமசாமியின் முந்தைய படத்தின் ஆழத்தைப் போன்று இப்படம் எடுக்கப்படவில்லை.

இயக்குனர் வில்லி கதாபாத்திரத்தை கச்சிதமாக காட்டுவதற்கு தவறிவிட்டார். வழக்கம் போல் சீரியலில் வரும் வில்லி போன்று வடிவுக்கரசி படத்தில் காட்சியளிக்கிறார். கமலக் கண்ணனின் தோழியாக வரும் முத்துலட்சுமி (வசுந்தரா) படத்திற்கு கச்சிதம்.

இயக்கம்: இயக்குனர் சீனு ராமசாமி வழக்கம் போல் தர்மதுரை போன்ற ஒரு படத்தை கொடுத்துள்ளார். ஆனால், என்ன இப்படம் சமூக அக்கறையுள்ள கதையை மையப்படுத்தி வந்துள்ளது.

பலவீனம்: சீரியலில் வரும் வில்லியைப் போன்று படம் அமைந்திருப்பது கொஞ்சம் பலவீனம் தான்.

பலம்: சமூகத்தில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை, நீட் தேர்வு, கடன் போன்றவற்றை மையப்படுத்திருப்பது படத்திற்கு பலம்.