கதிரின் ‘ஜடா’-வுக்கு கை கொடுத்த விக்ரம் வேதா டீம்
விஜய்சேதுபதி மாதவன் நடிப்பில் வெற்றிபெற்ற ‘விக்ரம்வேதா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்திருந்தவர் நடிகர் கதிர்.
பலரின் பாராட்டுக்களை பெற்றிருப்பார்.
தற்போது விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து அறிமுக இயக்குனர் குமரன் இயக்கிய ‘ஜடா’ படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது.
யோகிபாபுவும், கதிரும் இந்த படத்தில் கால்பந்தாட்ட வீரர்களாக நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் டீசரை விக்ரம்வேதா திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மாதவன், விஜய்சேதுபதி, ஷரத்தா, வரலட்சுமி, இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி, தயாரிப்பாளர் சசி உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சென்னை கால்பந்தாட்ட இளைஞனாக கதிர், யோகிபாபு, மற்றும் ஆடுகளம் கிஷோர், லிஜீஸ் நடித்திருக்கிறார்கள்.
முக்கியமாக கதாபாத்திரத்தில் ஓவியர் ஸ்ரீதர் நடித்திருக்கிறார்.
ஆக்ஷன், மற்றும் திரில் கலந்த கால்பந்தாட்ட விளையாட்டின் இன்னொரு பக்கத்தை சுவாரசியமான திரைக்கதையோடு விரைவில் டிரைலர், மற்றும் பாடல் வெளியீட்டோடு படம் வெளியாகிறது.