கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி

கடந்த சில ஆண்டுகளாகவே மாடுகளை வைத்து அரசியல் செய்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பீப் சூப் குடிக்கும் புகைப்படம் ஒன்றை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததையடுத்து, அதனை கண்டு ஆத்திரம் அடைந்த சில கும்பல் அந்த நபரின் வீட்டுக்கு சென்று பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்கினர். தற்போது காயம் அடைந்த நபர் சீரியஸான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது சமூக வலைத்தளத்தில், ‘எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல’ என்று பதிவு செய்துள்ளார். இதற்கு நடிகை கஸ்தூரி, “60 ஆண்டுகால திராவிட ஆட்சி கண்ட தமிழ்நாட்டில் அடுத்த வேளை உணவு என்பதே உண்டா என்று தீர்மானிக்கும் நிலையில் பல குடும்பங்கள் இல்லை. எனக்கு தெரிந்த சில மதங்களில் உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த மதங்களை குறை சொல்கிறாரா கனிமொழி அவர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்