கன்னி மாடம் திரை விமர்சனம். ரேட்டிங் – 4./5

நடிப்பு – ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவி, வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியன், மைம் கோபி, பிரியங்கா சங்கர், மற்றும் பலர்

தயாரிப்பு – ரூபி பிலிம்ஸ்

இயக்கம் – போஸ் வெங்கட்

ஒளிப்பதிவு – இனியன்J ஹாரிஸ்

எடிட்டிங் – ரிஷால் ஜெய்னி

இசை – ஹரி சாய்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா D.one

திரைப்படம் வெளியான தேதி – 21 பிப்ரவரி 2020

ரேட்டிங் – 4./5

தமிழ் திரைப்பட உலகில் 90களில்தான் ஒரு குறிப்பிட்ட பகுதியை, ஒரு குறிப்பிட்ட சாதியை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வெளி வந்தன. அப்படிப்பட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதால் அம்மாதிரியான திரைப்படங்கள் இடைவெளி இல்லாமல் வந்து கொண்டிருந்தன.

2000த்திற்குப் பிறகுதான் அம்மாதிரியான திரைப்படங்கள் வெளிவருவது முற்றிலுமாகக் குறைந்து போனது.

ஆனால், கடந்த சில வருடங்களாக ஒரு சில இயக்குனர்கள் மீண்டும் அந்த சாதியப் பின்னணியை கையில் எடுத்துக் கொண்டு தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த கன்னி மாடம் திரைப்படம் ஆணவக் கொலையை பின்னணியாகக் கொண்ட ஒரு திரைப்படம். குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்த நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம். முதல் திரைப்படத்திலேயே துணிச்சலான ஒரு கதையை எடுத்துள்ளார்.

சாதி தான் பெரிது என நினைக்கும் தந்தைக்கு அவரது பாணியிலேயே கதாநாயகன் தண்டனை கொடுத்து படத்தை முடிப்பது எதிர்பாராத அதிர்ச்சி. தருகிறது. சினிமாத்தனமான முடிவாக இருந்தாலும், இப்படி ஒரு துணிச்சலான முடிவுக்காகவே இயக்குனர் போஸ் வெங்கட் அவர்களை கண்டிப்பாக பாராட்டலாம்.

நடிகராக இருந்த போஸ் வெங்கட் இயக்குநராக கன்னி மாடம் திரைப்படம் முலம் அறிமுகம். வசனமும் அவரே.! சாத்தியமாகுமா அவருக்கு ,இப்படி பல கேள்விகளுடன் அமர்ந்தவர்களுக்கு அவர் சொன்ன ஒரேயொரு பதில் என்னவாக இருக்கும் ? தந்தை பெரியாரின் கருத்துகளை சொல்கிற அவர் நாத்திகம் சார்ந்த படமாக எடுத்திருப்பாரா? என்ற கேள்விதான்

சத்தியமாக நாத்திகம் சார்ந்த திரைப்படம் இல்லை. சமுதாயம் சார்ந்த திரைப்படம். இன்றும் நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதிய வன்மம் பற்றிய திரைப்படம். கச்சிதமான காட்சி அமைப்புகள் காதலும் அதில் தோய்ந்திருக்கிற இன்பமும் துன்பமும் எதிர்பாராமல் நிகழ்கிற விபத்தினால்  நேர்கிற விளைவுகளும் மனதை உலுக்குவதும்தான் கதை. இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கு வாழ்த்துகள் . இந்த திரைப்படத்தின் முலம் வெற்றி பெற்றிருக்கிறார்.
இனிமேல் இயக்குனர் தான் போஸ் வெங்கட்

சென்னையில் ஆட்டோ ஓட்டி வருபவர் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக். வெளியூரிலிருந்து இளம் கலப்புத் திருமண காதல் ஜோடி இரண்டாவது கதாநாயகன்
விஷ்ணு ராமசாமி, கதாநாயகி சாயாதேவி திருமணம் செய்து விட்டு கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தங்கியிருக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடி வருகிறார்கள்.

இந்தத் திருமணம் பிடிக்காத இரண்டாவது கதாநாயகன்
விஷ்ணு ராமசாமியின் உறவினர், சென்னையில் கதாநாயகி சாயாதேவியைக் கொலை செய்துவிட்டு இரண்டாவது கதாநாயகன்
விஷ்ணு ராமசாமியை அழைத்துச் செல்லத் துடிக்கிறார்கள். ஆனால், ஒரு விபத்தில் இரண்டாவது கதாநாயகன்
விஷ்ணு ராமசாமி விபத்தில் மரணமடைகிறார்.

தனிமைப்படுத்தப்படும் கதாநாயகி சாயாதேவிக்கு ஆதரவாக இருந்து அவருக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுத்து தங்க வைக்கிறார் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக். தானும், சாயா தேவியும் கணவன் மனைவி என பொய் சொல்லிய பின்தான் அவர்களுக்கு வீடு கிடைக்கிறது.

இந்நிலையில் கதாநாயகி சாயாதேவி கர்ப்பமடைகிறார். கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக்க்கு பாரமாக இருக்கக் கூடாதென வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார்.
கதாநாயகி சாயாதேவி

விஷ்ணு ராமசாமியின் தாய்மாமா சாயாதேவியை கொலை செய்ய மீண்டும் சென்னை வருகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனர் போஸ் வெங்கட், படத்தின் கிளைமாக்சை யாராலும் யூகிக்க முடியாது என்று சொன்னார். அது போலவே நிச்சயம் படம் இப்படித்தான் முடியும் என்று யாராலும் கணிக்க முடியாது.

யாருக்காவது இப்படித்தான் படம் முடியும் என்று லேசாகத் தோன்றினால் அவர்கள் சினிமாவைக் கரைத்துக் குடித்தவர்கள். ஹிஹி…. நமக்கு படம் இப்படித்தான் முடியும் என்று தோன்றியது என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். சாட்சிக்கு நம் பக்கத்து சீட்டில் படம் பார்த்தவரிடம் கேட்டு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரையும் மிகவும் கச்சிதமாக தேர்வு மிகச் சரியாகச் செய்திருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.

கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக், இரண்டாவது நாயகன் விஷ்ணு ராமசாமி, கதாநாயகி சாயாதேவி, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, பிரியங்கா சங்கர், வலினா பிரின்சஸ் என ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் மிக நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

இவருக்கு ஆடுகளம் முருகதாசுக்கும் செமயாய் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அக்கா நீங்க 20 வருசமா வாயும் வயிறுமா இருந்தீங்களா? உங்க தியாகி புருசன் எங்க அக்கா? என அவரை கிண்டல் செய்யும் போதெல்லாம் தியேட்டரில் அப்ளாஸ்.

ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா கவுன்சிலர் வாடகை வீட்டின் முதலாளி வேடத்தில் கலக்கி இருக்கிறார்.

ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவிற்க்கு நல்ல கேரக்டர் .இரும்பு பெண் மணி போல தோற்றமளித்தாலும் மனதில் இரக்கமும் சுரக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு. மிகவும் அருமையாக நடித்துள்ளார் வேறு வகையான கதாபாத்திரங்களுக்கும் பொருந்துவார்.

அதுபோல்தான் சூப்பர் குட் சுப்ரமணி நடிக்க வாய்ப்பு கேட்டு அலையும் நபராக அசத்தல். ரஜினிகாந்த் அரசியலுக்கு போறாரு. ரோபோ 3 படத்தை என்னைய வச்சுதான் ஷங்கர் எடுக்க போறாரு என காமெடி செய்வதிலும் வயசாச்சு எனது மனைவி மகளை பார்க்க ஊருக்கு போறேன் என கலங்கும் இடத்திலும் மிகவும் சிறந்த நடிப்பை. வெளி படுத்தியுள்ளார்

ஹரி சாய்யின் இசையமைப்பில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் நன்றாகவே கவனம் செலுத்தியிருக்கிறார்.

ஆனாலும், இன்று நீ நாளை நான் திரைப்படத்தின் இசைஞானி இளையராஜாவின் இசையில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பாடலை அழகாக காப்பியடித்து, ஓயாத மேகம் எனக் ஒரு பாடலை கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹரி சாய்

கதையிலும், கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்திய அளவிற்கு திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நல்ல திரைப்படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வு படத்திற்கு மைனஸ். முதல் திரைப்படம் என்பதால் சில குறைகள் இருக்கிறது. அடுத்த படங்களில் சரி செய்து கொள்வார் என நம்புவோம்.

கன்னி மாடம் – திரைப்படம் நல்ல காதலர்களின் மாடம்
நல்ல திரைப்படம் என பெயர் வாங்கும் என்பதில் ஐயமில்லை