கமலால் வீழ்ந்த விவேக் என்று போட்டு விடாதீர்கள் – விவேக்

விஸ்வாசம்’ படத்திற்கு பிறகு நடிகர் விவேக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கிய இந்த படத்தில் நடிகர் சார்லி, நடிகை பூஜா தேவரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாரான இந்த படத்தின் விளமபர நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விவேக் கூறியதாவது “நான் நகைச்சுவை நடிகராக புதுமுகங்களுடன் நடித்த படமெல்லாம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் எல்லாம் சரியாக ஓடவில்லை. ‘இவன் தான் பாலா’ என்ற படம் நன்றாக அமையும் என எதிர்பார்த்தேன். ஆனால் அந்த நேரம் கமலின் பாபநாசம்’ வெளிவந்து என் படத்தை நாசமாகிடிச்சு. உடனே கமலால் வீழ்ந்த விவேக்னு போட்ராதீங்க இது தேர்தல் நேரம்” என்று அவர் கூறியுள்ளார்.