கமல்ஹாசன் -ஏஆர். ரஹ்மான்-லைகா மெகா கூட்டணி

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன், தெனாலி ஆகிய படங்களுக்கு ஏஆர். ரஹ்மான் இசையமைதிருந்தார்.

இதனையடுத்து இவர்கள் இணைந்து பணி புரியவில்லை.

இந்தியன் படத்தை ஷங்கர் இயக்க, தெனாலி படத்தை கேஎஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படம் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் உருவாகவுள்ளது.

இப்படத்தை கமலே இயக்கி நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.