கமல்ஹாசன் மீதான வழக்கு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இன்று விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம் கமல் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே கமல்ஹாசன் மீது வேறொரு நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.