கயிறு திரை விமர்சனம். ரேட்டிங் – 2.75/5

நடிப்பு – எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ் ஹலோ கந்தசாமி மணிமாறன் மற்றும் பலர்

தயாரிப்பு – ஸ்கைவே பிக்சர்ஸ்

இயக்கம் –  ஐ.கணேஷ்

ஒளிப்பதிவு – ஜெயன் ஆர் உன்னிதன்

எடிட்டிங் – யூ கார்த்திகேயன்

இசை – விஜய் ஆனந்த், பிரித்வி

மக்கள் தொடர்பு – யுவராஜ்

திரைப்படம் வெளியான தேதி – 13 மார்ச் 2020

ரேட்டிங் – 2.75/5

தமிழ் திரைப்பட உலகில் புதுமுகங்கள் நடிக்கும் திரைப்படங்கள் அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் சில படங்கள் மட்டுமே ஓரளவிற்கு நல்ல கதையுடனும், உருவாக்கத்திலும் ரசிக்கும்படியாக உள்ளன.

இரண்டு வாரத்திற்கு முன்புதான் ஜீவா நடித்த ஜிப்ஸி திரைப்படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது அந்த திரைபபடத்திலும் கதாநாயகனும் குதிரையும் சேர்ந்து நெகிழ்ச்சியுடன் போராட்டக்களத்தில் நடித்திருக்கிறார்கள்

அதைப்போல் தான் இந்த கயிறு திரைப்படத்தில் ஒரு மனிதனுக்கும், மாட்டிற்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மிக நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள்.
இயக்குனர் ஐ.கணேஷ்

பரம்பரை பரம்பரையாய் பூம்பூம் மாடு வைத்துக் கொண்டு குறி சொல்லி பிழைப்பு நடத்துபவர் கதாநாயகன் குணா.

கிராமத்தில் வசிக்கும் கதாநாயகன் குணா, தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி வருகிறார்.

கதாநாயகன் குணா தனது தாத்தா மற்றும் தந்தை காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக குறி சொல்லி வருகிறார். அப்போது ஒருநாள் குறி சொல்லும் போது தவறாக சொல்லிவிட்டதாக ஊர் தலைவர் கதாநாயகனை கண்டிக்கிறார்.
அந்த ஊர் தலைவர்
இந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லுமாறு கூறுகிறார். இதனால் மனமுடையும் கதாநாயகன்,குணா

தனது பூம் பூம் மாட்டுடன் தனது சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி
வேறு   கிராமத்திற்கு செல்கிறார். கதாநாயகன் குணா

அவன் செல்லும் , கிராமத்தில் அங்கு பூ விற்று பிழைப்பு நடத்தி வரும் கதாநாயகி காவ்யா மாதவ் கதாநாயகன் குணா மீது காதல் வயப்படுகிறார்.

இவர்கள் இவர்களின் காதலுக்கு கதாநாயகியின் தாயார் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தனது மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்க்கிறார். ஆனால் கதாநாயகி காவ்யா மாதவ்
தனது தாயார் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்து விடுகிறார்.

அதன் பின்னர் கதாநாயகி காவ்யா மாதவின் காதலுக்கு அவரது தாயார் பல நிபந்தனையுடன் சம்மதம் தெரிவிக்கிறார்.

கதாநாயகன் குணா அவன் செய்யும் பூம் பூம் மாட்டுக்கார தொழிலை கைவிட்டுவிட்டு, வேறு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை கதாநாயகன் குணா ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் குணா, பூம் பூம் மாட்டுக்கார கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திருக்கிறார். தனது மாடு மீது அவர் வைத்திருக்கும் பாசம், ‘கந்தா…கந்தா…’ என்று அழைக்கும் அன்பு, மாட்டை காணாமல் தவிக்கும் உருக்கம் என நடிப்பில் ஜொலிக்கிறார்.
கதாநாயகன் குணா

அவருடன் சேர்ந்து  வாயில்லாத ஜீவன் அந்த மாடும் நடித்து இருக்கிறது. கதாநாயகி காவ்யா மாதவ், கிராமத்து பெண் வேடத்துக்கு மிகவும் கச்சிதமாக பொருந்துகிறார். ஹலோ கந்தசாமி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார்.

இயக்குனர் ஐ.கணேஷ் கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. வித்தியாசமான கதையை மிக அழகாக கையாண்டுள்ள இயக்குனர் ஐ.கணேஷ்
அதிகமாக பாராட்டுகள்.

கிராமத்து யதார்த்தங்களை தன் கதைக்குள் வெகு இயல்பாக கொண்டு வந்து இருக்கிறார். யதார்த்தமான காட்சிகளுடனும், விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில், வேகத்தடை போட்டது போல் பாடல் காட்சிகளை வலுக்கட்டாயமாக நுழைத்து இருக்கிறார்.

பாடல்கள் மனதில் பதியவில்லை என்றாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் பிரித்வி. ஜெயன் ஆர் உன்னிதனின் ஒளிப்பதிவு கன கச்சிதம். கிராமத்து உள்ள பச்சை பசேலென்று இருக்கும் அழகை திரையில் பிரதிபலித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்

ஒரு மாட்டின் மீது அதன் , வளர்ப்பவர்கள் எவ்வளவு பாசமாக இருப்பார்கள் என்பதை மன நெகிழ்வுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐ.கணேஷ். இந்த திரைப்படத்தின்  கிளைமாக்சில் ஆணித்தரமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இயக்குனர் ஐ.கணேஷ்

வழக்கமான வரும் சினிமாவை ரசிப்பவர்களுக்கு இந்தப் படம் எப்படியோ, ஆனால், ஒரு ஆத்மார்த்தமான படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்குப் பிடிக்கும்.

கயிறு – சிறந்த படைப்பு