கருத்துக் கணிப்பில் பின் தங்கிய பவன் கல்யாண்

ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பார்லிமென்ட் தேர்தல் ஆகியவற்றில் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா கட்சி குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என தேர்தலுக்கு முன்பு பலரும் தெரிவித்திருந்தார்கள். ஆனால், தன்னுடைய சில செயல்களால் தானும் ஒரு வழக்கமான அரசியல்வாதிதான் என காட்டிக் கொண்டார் பவன் கல்யாண். அது அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களக்கு முன்பு வெளியான ஆந்திர மாநில கருத்துக் கணிப்பில் பவன் கல்யாண் கட்சி பெரிய அளவில் வெற்றிகளைக் குவிக்க வாய்ப்பில்லை என்றே அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன. சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் பவன் கல்யாண் கட்சி 4 இடங்களைக் கைப்பற்றினாலே அதிகம்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசக் கட்சியின் வாக்கு வங்கியை ஜனசேனா கட்சி பிரித்திருக்காது என்றே பலரும் கருதுகிறார்கள். இருப்பினும் ஜனசேனா கட்சிக்கு 10 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

ஆந்திர அரசியலில் பவன் கல்யாண் ஒரு கிங்மேக்கராக உருவாக இந்த தேர்தல் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதுதான் உண்மை என ஆந்திர மக்கள் நினைக்கிறார்களாம். இருப்பினும் நான்கைந்து சீட்டுக்களைப் பெற்றால் கூட பவன்கல்யாணின் ஆரம்ப அரசியலுக்கு அது விதையாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்