கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் தரும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்
கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் தரும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்
சீனா நாட்டில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இந்த உலகத்தையே உலுக்கியுள்ளது.
இந்த வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகள் அச்சத்தில் இருந்தாலும் சீன மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை இந்த வைரஸ் பலி வாங்கியுள்ளது.
உலகின் சிறந்த மருத்துவர்களை இந்த வைரஸை கண்டு அச்சத்தில் உள்ளனர்.
ஆராய்ச்சிகள் செய்து இதற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க தான் தயாராக இருப்பதாக உலகப்புகழ் பெற்ற ஆக்ஷன் நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.
அவரின் பதிவில்… அறிவியலும், தொழில்நுட்பமும் சேர்ந்துதான் இந்த வைரஸை வெற்றிகொள்ள முடியும்.
பலரும் இதே எண்ணத்தில் இருப்பீர்கள் என நம்புகிறேன். கரோனாவுக்கு விரைவில் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்.
தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு குழுவோ இதற்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ஒரு கோடி) தொகையால் நன்றி சொல்ல விரும்புகிறேன். என தெரிவித்துள்ளார்.