கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்குசசிகுமார் நன்றி

கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் / இயக்குனர் சசிகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆண்டு முதல் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது 201 மேற்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கி சிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் / இயக்குனரான சசிகுமார் அவர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதினை வழங்கியுள்ளது.பொள்ளாச்சியில் தன் படப்பிடிப்பில் (sasikumar19 ) இருந்த சசிகுமார் அவர்கள் விருது வழங்கிய தமிழக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பரிந்துரையின்படி , இயல் இசை , நாடகம் , கிராமியம் , திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற கலைப்பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருதுபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.