கலையும் காபியும்’ – கல்லூரி நண்பனின் புது முயற்சிக்கு ஊக்கமளிக்கும் இயக்குனர் பா. இரஞ்சித்!

இயக்குனர் பா. இரஞ்சித் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு ஓவியக்கல்லூரியில் பயின்றவர். இவரோடு படித்த நண்பர்கள் பலரும் சினிமா மற்றும் சிற்பக்கலை, ஓவியர்களாக இருக்கிறார்கள்.

கலை சம்பந்தப்பட்ட துறைகளில் பலர் பணியாற்றி வருகின்றனர்.

அவரது நண்பர்களில் ஒருவரான பிரபுராம் சென்னையில் Artcafe என்னும் பெயரில் புதிதாக Coffee Shop ஒன்றை துவங்கியிருக்கிறார். இதன் துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பா.இரஞ்சித்,

“எனது நண்பர்கள் எந்த புது முயற்சி செய்தாலும், அதில் கலை முக்கிய பங்கு வகிக்கும். கலையோடு எதையும் அணுகுவதில் பெரும் உற்சாகம் இருக்கும் எங்களுக்கு எப்போதும். அந்த வகையில் வெறும் காபி ஷாப் என்றில்லாமல், கலைத்தன்மையோடு இதனை வடிவமைத்திருக்கிறார்கள். இங்கு நிறைய ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன, புதிய ஓவியங்கள் தொடர்ந்து இங்கு காட்சிக்கு வைக்கப்படும். கூடவே டாட்டு போன்றவையும் இங்கு இருப்பது மேலும் சிறப்பானதாகவும். நண்பன் பிரபுராமின் ArtCafe மென்மேலும் வளர வாழ்த்துகள். மகிழ்ச்சி” என்றார்.