களவாணி 2′ பட விவகாரம் – கொலை மிரட்டல் விடுவதாக இயக்குநர் சற்குணம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

‘களவாணி 2’ பட விவகாரம் – கொலை மிரட்டல் விடுவதாக இயக்குநர் சற்குணம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு வெளியாகி மெகாஹிட் வெற்றிபெற்ற ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் நடிகர் விமல் மற்றும் நடிகை அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். ‘களவாணி 2’ படத்தில் நாயகன் அரசியல்வாதியாக வலம் வரும் இந்த படத்தினை ஜூன் 10ம் தேதி வரை வெளியிட இடைக்காலத்தடை விதித்து நிதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இயக்குநர் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த படத்தை திரையிடவிடாமல் தடுப்பதாகவும், தனக்கு கொலைமிரட்டல் விடுப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன் மற்றும் காமரன் மீது இயக்குநர் சற்குணம் காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.