களவாணி2-வில் கெத்து காட்டிய பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

களவாணி2 படம் மூலமாக சினிமாவில் மறுபிரவேசம் எடுத்திருக்கிறார் பப்ளிக் ஸ்டார் நடிகர் துரை சுதாகர். விமலின் மாமாவாகவும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகவும் படம் முழுதும் கலக்கி இருந்தார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இவரது நடிப்பை மக்களும் திரை விமர்சகர்களும் பாராட்டியுள்ளனர். அந்த உற்சாகத்தில் உள்ள துரை சுதாகர் இனி அடுத்தடுத்த படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். ஒன்றிரண்டு பெரிய படங்களில் கமிட் ஆகியுள்ள துரை சுதாகருக்கு நடிப்பில் ரகுவரன் போல பெயரெடுக்க வேண்டும் என்பது தான் லட்சியமாம். மேலும் இவர் ஏற்கெனவே ஏற்கெனவே தப்பாட்டம் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது