கவிதாலயா நிறுவனத்தின் கமல் நடித்த மன்மதலீலை படம் சம்பந்தப்பட்ட அறிவிப்பு

இயக்குனர் சிகரம் கே
பாலசந்தர் இல்லையென்றால் தமிழ்சினிமாவில் நிறைய ஆளுமைகளுக்கு பெரிய அடையாளமோ அங்கீகாரமோ இல்லாமல் போயிருக்கும். ரஜினி, கமல், பிரகாஷ்ராஜ் என எக்கச்சக்க திறமையாளர்களை உருவாக்கியவர் அவர். மேலும் கவிதாலயா என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தையும் உருவாக்கி அதன் மூலமாக நிறைய இளம் இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தினார் பாலசந்தர். அவரின் மறைவு சினிமா உலகிற்கு பேரிழப்பு என்பதை சினிமாத்துறை மட்டுமல்லமால் பொது சமூகமும் ஏற்றுக்கொள்ளும். அவர் அப்படியான படைப்பாளி.
நேற்று நடைபெற்ற அவரது 89-வது பிறந்தநாள் விழாவில் கவிதாலயா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டது. 1976-ல் பாலசந்தர் இயக்கி கமல் நடிப்பில் வெளியான மன்மதலீலை படத்தை கவிதாலயா திரும்பவும் எடுக்க இருக்கிறது என்பதே அந்த அறிவுப்பு. இப்படத்தை சரண் இயக்க இருக்கிறார். சரணுக்கு இது முக்கியமான தருணம். அவர் இதில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவரும் ஜெயித்து கவிதாலயா நிறுவனமும் ஜெயிக்கட்டும்.