காங்கிரஸில் இணைந்தார் பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா

சத்ருகன் சின்ஹா, பீகார் மாநிலம் பாட்னாசாகிப் தொகுதியின் பாஜக எம்.பி. மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார் பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துதெரிவித்து வந்த இவர், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மூத்த உறுப்பினர் என்பதால் பா.ஜ.க., அவர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகியதாக அறிவித்த அவர், “நீண்டகாலம் பணியாற்றிவிட்டு பாஜகவில் இருந்து விலகுவது வலியை தருவதாகத்தான் இருந்தது. ஆனால் பிரபல தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஆகியோரை கட்சி நடத்திய விதம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது என்றும், “வாஜ்பாய் காலத்தில் கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது கட்சியில் ஜனநாயகம் உண்மையான உணர்வுடன் இருந்தது. ஆனால் இப்போது ஒரு நபர் ஆட்சி, இரு நபர் படை என்று தான் உள்ளது” என்று கூறினார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் முன்னிலையில் சத்ருகன் சின்ஹா இன்று காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.