காங்கிரஸ் தேர்தல் அறிக்கை-அதிரடியான வாக்குறுதிகள்

டெல்லி, அக்பர் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை சற்றுமுன்னர் வெளியிட்டார் இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதி கூட பொய்யாக இருக்க கூடாது என்பதே எங்களின் நோக்கம் தேர்தல் அறிக்கையானது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருப்பது மிக மிக அவசியம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 5 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன இந்த அறிக்கையில், ஏழைக்களுக்கான குறைந்த பட்ச வருவாய் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அறிக்கையின் விவரங்கள் 

இதோ👇

1 நியாய் திட்டத்தின் கீழ் ஏழைக்குடும்பங்களுக்குமாதந்தோறும் ரூ. 6000. இந்த தொகையானது குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

2 விவசாயத்திற்கு தனி பட்ஜெட் நிச்சயம்.

3 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வறுமை நிச்சயம் ஒழிப்பு.

4 விவசாயிகள் அவர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

5 தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து. தமிழகத்தில் மட்டுமில்லை எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்க்கப்படுகிறதோ அந்த மாநிலங்களில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும்.

அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்தல் நடத்தப்படும்.