காஜல்அகர்வால்லின் நடிப்பில் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்தார்
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வந்தது. இந்த படத்தை தணிக்கை செய்த குழுவினர் 25 இடங்களில் காட்சிகளை நீக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து ரிவைசிங் குழுவிடம் படக்குழு முறையிட்டது. ஆனால் அவர்களும் அதனை நீக்க கூறியதால், அவற்றை நீக்க தயாரிப்பாளர் சம்மதித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.











