காஜல் அகர்வாலுக்கு ஜோடியாகும் பிரபல ஹீரோ.

இயக்குநர் வெங்கட் பிரபு ‘மாநாடு’ திரைப்படத்திற்கு முன்பாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், தற்போது நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும், இந்த கதையை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 10 எபிசோட்களை கொண்ட வெப் சீரிஸாக உருவாக்கும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது