காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் இருந்து ராகவா லாரன்ஸ் வெளியேறினார்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் ‘காஞ்சனா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் படமான ‘லட்சுமி பாம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியது. இந்நிலையில், இந்த படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு படைப்பாளிக்கு பணம், புகழை விட தன்மானம் தான் முக்கியம் என்றும், நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தன்னுடைய பார்வைக்கு வராமலேயே வெளிவந்துவிட்டதாகவும், அந்த போஸ்டரின் டிசைன் தனக்கு திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு படைப்பாளியாக தான் இந்த விஷயத்தில் அவமதிப்பு செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். 

ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் இணைப்பு