காஞ்சனா-3′ படத்தின் முதல் நாள் வசூல் விபரம்.

‘ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தின் முதல் 2 பாகங்களை அடுத்து, இதன் மூன்றாம் பாகம் நேற்று வெளியானது. படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பள்ளி மற்றும் விடுமுறை காலம் என்பதால் குடும்பத்துடன் பலரும் திரையரங்கிற்கு வருகிறார்கள்

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாடு முழுக்க
ரூ.9.85 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
அதே போல, சென்னையில் முதல் நாள் வசூல் ஒன்றரை கோடியில் இருந்து 2 கோடி ரூபாய் வரை இருக்கும் எனவும், முதல் மூன்று நாட்களில் இந்த படம்
ரூ.28 கோடி அளவுக்கு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.