காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (வயது 83) உடல்நலக் குறைவால் காலமானார்.
சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பிப்28ம் தேதி காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி ஜெயேந்திரர் காலமானார். பிறகு அவரது உடல் சங்கர மடத்துக்கு கொண்டு வரப்பட்டு பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சி மடத்தின் 69-வது மடாதிபதியாக 1994-ம் ஆண்டு ஜெயேந்திர சரஸ்வதி பொறுப்பேற்றார். 1954-இல் நியமனம் முன்னதாக 1954-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார் காஞ்சி ஜெயேந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 19-ஆவது வயதில் அவர் இளைய மடாதிபதி ஆனார். நடை சாத்தப்படுகிறது ஜெயேந்திரரின் மறைவையொட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படுகிறது. அங்கு சுவாமி தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
2006ல் வழக்கு:
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் 2005-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். பின்னர் 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக புதுவை நீதிமன்றம் 2013-இல் தீர்ப்பு வழங்கியது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/kanchi-jayendrar-admits-hospital/articlecontent-pf297506-312794.html