காட்டேரி’ படத்தின் இயக்குனர் தயாரிப்பு நிறுவனம் மீது புகார்
‘யாமிருக்க பயமே’ என்ற வெற்றி படத்தினை இயக்கியவர் டிகே. இவர் அடுத்து தற்போது ‘காட்டேரி’ என்ற புதிய ஹாரர் படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போது இயக்குனர் டிகே அந்த படத்தினை தயாரித்துள்ள ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மீது ட்விட்டரில் புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர், “காட்டேரி.. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இயக்குனர் தயாரிப்பாளர் அலுவலகம் சென்றால் வாட்ச்மேன், கேஷியர் போன்றவர்களிடம் தான் பேசவேண்டும்” என பதிவிட்டிருந்தார். இதனால் தயாரிப்பாளருக்கும்-இயக்குனருக்கும் இடையில் மோதலா என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்த நிலையில் அந்த ட்விட்டை இயக்குனர் திடீரென நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.