காதலியை கரம் பிடித்தார் ‘நோட்டா’ இயக்குனர்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆனந்த் ஷங்கர் ‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினர். 

இதனை தொடர்ந்து ‘இருமுகன்’, ‘நோட்டா’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்நிலையில், இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது காதலியான திவ்யங்கா ஜீவானந்தம் என்பவரை இன்று கரம்பிடித்தார். இவர்களுக்கு திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.