காதலி பிராச்சி மிஸ்ராவுடன் நிச்சயதார்த்ததை முடித்தார் நடிகர் மகத்

காதலி பிராச்சி மிஸ்ராவுடன் நிச்சயதார்த்ததை முடித்தார் மகத்

‘மங்காத்தா’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். இதன்பின்னர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் மகத் கலந்து கொண்டார். அப்போது நடிகை யாஷிகா மீது காதல் கொண்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தன்னுடைய காதலியான பிராச்சியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாக நடிகர் மகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இவருக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.