காப்பான் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்க்கு நன்றி தெரிவித்தார் – நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டு, சூர்யா தெரிவித்த புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்ததுடன், சூர்யா நடித்த சில படங்களை குறிப்பிட்டு அந்தப் படங்களில் சூர்யாவை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினிக்கு சூர்யா தனது சமூக வலைதளம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் அதில் அவர், “உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. நீங்கள் ‘காப்பான்’ பட விழாவில் கலந்து கொண்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவு”என்று பதிவு செய்துள்ளார். 

https://twitter.com/Suriya_offl/status/1153209972513099776?s=19