காமோஷி’ படுதோல்வி, சிக்கலில் ‘கொலையுதிர் காலம்’
தமிழ், ஹிந்தியில் ஒரே சமயத்தில் தயாரான படங்கள் ‘கொலையுதிர் காலம், காமோஷி’. இரண்டு படங்களுமே ஜுன் 14ம் தேதி வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், படத் தலைப்பு விவகாரத்தில் ‘கொலையுதிர் காலம்’ படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. அதனால், ஜுன் 14ம் தேதி ‘காமோஷி’ படம் மட்டுமே ஹிந்தியில் வெளியானது.
ஹிந்தியில் பிரபுதேவா, தமன்னா ஆகியோர் நடித்த அந்தப் படம் படுதோல்வி அடைந்துள்ளது. ஹிந்தியில் இருவருக்குமே மீண்டும் ஒரு எதிர்பாராத தோல்வியை அந்தப் படம் கொடுத்துவிட்டது.
ஹிந்தியில் படம் தோல்வியடைந்ததால் தமிழிலும் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருப்பதால் ஹிந்தியைப் போல நடக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கலாம்.
இருப்பினும் சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நயன்தாராவாக இருந்தாலும் படம் நன்றாயில்லை என்றால் அவ்வளவுதான். ‘கொலையுதிர் காலம்’ தமிழ்த் தயாரிப்பாளரைக் காப்பாற்றுமா, கைவிடுமா என்பதுதான் இப்போதைய கேள்வி