காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை

காம்ப்ரமைஸ் ஆன நந்தினி சீரியல் நடிகை; நடிகர் மீதான பாலியல் புகார் வாபஸ்!

திருவள்ளூர்: நந்தினி தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் நடிகை ராணி, திரைப்பட நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியிருந்தார். அதனை நேற்று வாபஸ் பெற்றார்.

திரைப்பட நடிகை ராணி செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஓரு மணி நேரத்தில் தன்னிடம் திரைப்பட நடிகர் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்றதாக அறிவித்தார். நடிகையிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை; நடிகை தன் மீது தவறான நோக்கில் புகார் அளித்து வாபஸ் பெற்றதாக திரைப்பட நடிகர் குற்றம் சாட்டினார். காவல் நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ராணி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி என்ற நெடும்தொடரில் திரைப்பட நடிகர் சண்முகநாதன் உடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்த போது சண்முகநாதன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட தனது கணவர் பிரசாத்தையும் சண்முகநாதன் தாக்கியதாகவும், தன்னை தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சண்முகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி, செங்குன்றம் காவல் நிலையத்தில் நடிகை ராணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

தொடர்ந்து, சண்முகநாதணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். சக நடிகர் மீது திரைப்பட நடிகை பாலியல் புகார் அளித்த சம்பவம் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது

இதனை அடுத்து திடீரென மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்த நடிகை ராணி, நடிகர் சண்முகநாதன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக காவல் நிலையத்தில் தெரிவித்ததை அடுத்து புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராணி தான் நடித்து வரும் நத்தினி நெடும்தொடரை நம்பி 350 குடும்பங்கள் இருப்பதாகவும், நடந்த சம்பவத்திற்காக என்னிடமும் எனது கணவரிடமும் நடிகர் மன்னிப்பு கேட்டதால் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.

இதே போன்று நடிகர் சண்முகநாதன் நான் இந்த நந்தினி நெடும்தொடரில் கடந்த இருபது நாட்களாக நடித்து வருகிறேன்! எனக்கும் நடிகை ராணிக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது அது கைகலப்பாக மாறியது! அதன் பின்னர் அவர் என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஆனால் நான் பாலியல் தொந்தரவு எல்லாம் கொடுக்கவில்லை. நான் இதற்காக மன்னிப்பு கேட்கவில்லை! நடிகை என் மீது தவறான நோக்கில் புகார் அளித்து என் மீது கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார் என திரைப்பட நடிகர் சண்முகநாதன் குற்றசாட்டு தெரிவித்தார்.

இதனை அடுத்து நடிகை ஒருவர் நடிகர் மீது பாலியல் புகார் கூறி காவல் நிலையத்தில் படியேறிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், காவல்நிலையத்தில் சினிமா காட்சி போல் நடந்த புகார் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது!