கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பீசா, ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.  ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முதன் முறையாக இவர்கள் கூட்டணி இணைய இருப்பதால், ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, ‘‘இந்த படத்தில் பிரம்மாண்டம் இருக்காது. ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் பிரம்மாண்டம் இருக்கும். மேலும் ரஜினி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.