கார்த்தி-ஜோதிகா படத்தில் பழம்பெரும் நடிகை நடிக்க ஒப்பந்தம்
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார், அவர்கள் தந்தையாக சத்தியராஜ் நடிக்கிறார். திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நிகிலா விமல் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் இதற்குமுன் கிடாரி, வெற்றிவேல் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.