கார்த்தி – ஜோதிகா படத்தில் ‘ராட்சசன்’ பட பிரபலம்

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற அபிராமி இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘தீரன்’ படத்திற்கு பிறகு கார்த்தியுடன் அபிராமி இணைந்து நடிப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.