காலங்களில் அவள் வசந்தம் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3. / 5.

நடிகர் நடிகைகள் :- கௌசிக் ராம், அஞ்சலி, ஹெரோஷினி, சுவாமிநாதன், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், மேத்யூ வர்கீஸ், ஜெயா சுவாமிநாதன், அனிதா சம்பத், அருண், சௌந்தர்யா நஞ்சுண்டன், வி.ஜே.ராஜீவ், தருண் பிரபாகர், ராஜமா, டாக்டர். மணிகண்டன், டாக்டர். பாயல் மணிகண்டன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராகவ் மிர்தாத்.

ஒளிப்பதிவு :- கோபி ஜெகதீஸ்வரன்.

படத்தொகுப்பு :- லியோ ஜான் பால்.

இசை :- ஹரி எஸ்.ஆர்.

தயாரிப்பு :- அறம் என்டர்டெயின்மென்ட் , ஸ்ரீ ஸ்டுடியோஸ்.

ரேட்டிங் :- 3. / 5.

பல காலங்களுக்கு பிறகு தமிழ் திரைப்பட உலகில் வந்துள்ள நல்லதொரு காதல் திரைப்படம் “காலங்களில் அவள் வசந்தம்”.

காதல் திரைப்படங்களில் கதைகளை எப்படி எல்லாம் சொல்ல வேண்டுமா அப்படி சொன்னால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

அதில் பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் திரைப்படத்தில் இருக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் கூடப் பார்க்காமல் நல்ல காதல் கதை உள்ள திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

காதல் கதை உள்ள திரைப்படத்தை உரிய ரசனையுடன் காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தாத்.

அறிமுக கதாநாயகன் கவுசிக் ராம் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

இவரது குடும்பம் உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பம்.

வீட்டிற்கு செல்லப்பிள்ளையான அறிமுக கதாநாயகன் கவுசிக் ராம் திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் காதல் என்பதே திரைப்படங்களில் வருவது தான் அதுமாதிரியான ஒரு வாழ்க்கையை தனது நாம் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்.

அவர் பார்க்கும் சினிமாக்களே வாழ்க்கை என நினைத்து பெண்களை காதலிப்பதை பொழுதுபோக்காக கொண்டவர் புதுமுக கதாநாயகன் கௌசிக் ராம்.

புதுமுக கதாநாயகன் கௌசிக் ராம் தந்தையின் நண்பர் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்ததும் கதாநாயகி அஞ்சலி நாயருக்கு கதாநாயகன் கௌசிக் ராம் கண்டதும் காதல் வருகிறது.

அஞ்சலி நாயர் நாயகன் கெளசிக் ராமை பார்த்த அவர் மீது காதல் வயப்பட்டு இரு வீட்டார் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொள்கிறார்கள்

ஆனால், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆசையில் அலைந்து வரும் கதாநாயகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது.

திருமணத்திற்கு பின்பு கதாநாயகன் கௌசிக் ராம் பழைய காதல் தெரிய வர இருவருக்குள் பிரச்சனை ஏற்பட்டு டைவர்ஸ் வரை செல்கிறார்கள்.

அந்த காதலிக்காக தனது மனைவியை பிரிந்தாரா? அல்லது மனைவியின் காதலை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா? இல்லையா? இறுதியில் ஓருவரை ஓருவர் புரிந்து கொள்கிறார்களா? இல்லையா? என்பது தான் இந்த
காலங்களில் அவள் வசந்தம்
திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தில் ஆறிமுக கதாநாயகனாக புதுமுக நடிகர் கௌசிக் ராம் அறிமுகம் ஆகியிருக்கிறார்.

கதாநாயகனுக்கு தேவையான அத்தனை தகுதிகளையும் வளர்த்துக் கொண்டு அறிமுக நாயகன் கெளசிக் ராம் இந்த திரைப்படத்தில் திரைப்படங்களை பார்க்கும் ரொம்பவே ஆர்வமுள்ள ஷியாம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை திரைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது எல்லாம் ரொம்பவே புதுசாக உள்ளது.

காதலனாகவும் கன்ஃபியூஸ் கணவனாகவும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகனை பார்த்ததுமே மயங்கி அஞ்சலி நாயர் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு இவரது நடிப்பு திரைப்படத்தில் ரொம்பவே இயல்பாகவும் எதார்த்தமாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார்.

கதாநாயகி அஞ்சலி நாயர் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

கண்களில் கவர்ச்சி, சோகம், பிரிவு, காதல் என பல உணர்வுகளை மிக நன்றாக சொல்கிறார் கதாநாயகி அஞ்சலி நாயர்.

சரியான வாய்ப்புகள் கிடைத்தால் அடுத்த சினேகா அஞ்சலி தான்.

மற்றொரு கதாநாயகி ஹாசினி சிண்ட்ரோம் சில காட்சிகளில் வந்தாலும் உண்மையான காதல் என்ன என்பதை தன் கதாபாத்திரம் மூலம் ஒகே.

மற்றொரு கதாநாயகி ஹாசினி சிண்ட்ரோம் திரைப்படத்தில் பெரிதாக ஒட்டவில்லை என்பதை திரைப்படத்திலேயே வசனமாக வைத்திருப்பது சிறப்பு.

கேண்டில் லைட் டின்னர், கிரீட்டிங் கார்ட் என 90’ஸ் 2கே கிட்ஸ்களின் காதலை கண்முன் நிறுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை கதை தகுந்தவாறு அமைத்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர் இசையில் பாடல்கள் கேட்கும் படி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் மிகவும் அருமையான ஒளிப்பதிவு.

லியோ ஜான் பால் அவருடைய படத்தொகுப்பு கதைக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் படக்குழுவினரை சரியாக பயன்படுத்தியுள்ளார்.

இந்த காலத்து காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத்.

குடும்பத்தில் சண்டை சச்சரவு மற்றும் இகோ இருப்பதால் டைவர்ஸ் அதிகமாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் சொல்வது போல் மனைவி கணவனிடமும் கணவன் மனைவியிடமும் ஈகோ இல்லாமல் சாரி சொல்லி விட்டு வாழ்ந்தால் சந்தோசமாக குடும்பமாக இருக்கும் டைவர்ஸ் இல்லாத வாழ்க்கையாக இருக்கும்.

“பாசிட்டிவ் மட்டும் பார்ப்பது காதல் இல்லை.

நெகட்டிவையும் ஏற்றுக்கொள்வதும் காதல் தான்” என்ற வசனங்கள் சம கால காதலை சொல்கிறது.

நல்ல கதையில் திரைக்கதை நன்றாக இருந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கலாம்.