காலம் பேசாது ஆனால் பதில் சொல்லும்.; ரஜினிகாந்த்தின் சூப்பர் பேச்சு

பிரபல பேச்சாளர் சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ராமாயணம் எழுதியதால்தான் கம்பருக்கு பெருமை. அதே மாதிரி, இந்த நூலை எழுதியதால் சாலமன் பாப்பையா சாருக்கு மிகப் பெரிய புகழ் வந்துசேரும்.

திருச்சி சிவா பேசும்போது, இந்த நூலை எல்லோருக்கும் போய் சேரும்படி செஞ்சிடுங்க. இல்லைனா, ஸ்டாலின் முதல்வரானதும் அதை நாங்க பண்ணிடுவோம்னு சொன்னார்.

அதை கேட்ட பிறகு (அதிமுக அமைச்சர்) மாஃபா. பாண்டியராஜன் சார் பதறிப்போய், இல்லை இல்லை நாங்களே இந்த நூலை எல்லோருக்கும் போய் சேரும்படி செஞ்சிடுறோம்னு சொன்னார்.

ஆக மொத்தம், இந்த நூல் எல்லோருக்கும் போய் சேர்ந்தால் ரொம்ப சந்தோசம். இந்த நூல் எல்லா இளைஞர்களுக்கு போய் சேரணும்.

காலம் பேசாது ஆனால், பதில் சொல்லும்.

கம்பர், ராமாயணம் பத்தி, தமிழ் இலக்கியங்களை பத்தி பேசின பாப்பையா சார் வாய் ரஜினி பத்தியும் பேசியது எனக்கு பெருமை. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் என்னிடம் பேசுவார்.

அவர் நூறாண்டு ஆரோக்கியமாக வாழந்து இந்த நூல் மாதிரி நிறைய பொக்கிஷங்களை மக்களுக்கு கொடுக்கணும்னு வேண்டிக்கிறேன்.” இவ்வாறு ரஜினி பேசினார்.