காலை 5 மணி காட்சி ஸ்பெஷல் ஷோ என்ற பெயரில் வெத்து பந்தா பண்ணும் பிரபலங்கள்
ஒரு படம் ரிலீசானால் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் திரையிடப்படும். ஆனால் பண்டிகை தினங்கள் என்றால் 5 காட்சிகள் இருக்கும்.
பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் சிறப்பு காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகள் வரை திரையிடப்படும். இது அரசு அனுமதியுடன் அதிகாலை 6 மணிக்கு தொடங்குவது வழக்கம்.
அண்மைக்காலமாக இது போன்ற வழக்கம் எல்லாம் படங்களுக்கும் அதிகரித்து வருகிறது.
அதிகாலை காட்சி வைத்தால் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாக மக்கள் நம்புவார்கள் என்ற பேரில் நிறைய தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.
இவர்களே பெரும்பாலான சினிமா டிக்கெட்டுக்களை வாங்கி திரையிட சொல்வதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லை.
ஆனால் அவர் நடிக்காமல் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திற்கு சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் 5 மணி காட்சி இருந்தது.
படத்தில் பணியாற்றியவர்கள் அவர்களின் குடும்பத்தார் என ஒட்டுமொத்த குழுவும் படம் பார்க்க வந்தனர். இதனால் தியேட்டர் நிரம்பி வழிந்தது.
இதற்கு அவர்கள் பீரிமியர் ஷோக்கள் போடலாம். எதற்காக அவர்கள் படம் பார்க்க சிறப்பு காட்சிகள் திரையிட வேண்டும்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் நிறைய டிவி மற்றும் யூடிப் சேனல்கள் நபர்கள் காத்திருப்பார்கள். அவர்களிடம் தங்கள் படத்தை பற்றி அவர்களே பெருமையாக பேசிடவே இதுபோன்ற உக்திகளை கையாள்வதாக சொல்லப்படுகிறது.
இதை நம்பி மற்ற தியேட்டர்கள் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ரசிகர்களும் இதை நம்பி போய் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
சில தியேட்டர்களின் அதிகாலை காட்சிகள் என்ற பெயரில் போனால் பாதி டிக்கெட்டுக்கள் கூட விற்பதில்லை. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் பதிவை பார்த்தாலே அது தெரிந்துவிடும்.
அதிகாலை 5 மணி காட்சி என்றால் ஒரு கெத்து என்று நினைத்து சிலர் இதில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவது சரியா? இது மக்களை ஏமாற்றும் செயல்