காவி கலருக்கு மாறிய இந்திய கிரிக்கெட் அணி..!

ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

முன்புறம் கருநீலமும், பின்புறம் ஆரஞ்ச் நிறமும் கொண்ட இப்புதிய ஜெர்சியை, இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை ஜூன் 30ம் தேதி நடைபெறவுள்ள, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்து விளையாட உள்ளனர். புதிய ஜெர்சியில் ஆரஞ்ச் நிறம் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் இந்த காவி கலர் உடை அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது.