கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் மகேஷ் பாபுவின் அம்மாவும் நடிகை விஜய நிர்மலா காலமானார்!
ஆந்திரா திரைப்படத்துறையில் நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் விஜய் நிர்மலா (73). நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகில்ல மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி காலமானார்.
மச்ச ரேகை’ என்ற தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘எங்க வீட்டு பெண்’, ‘பணமா பாசமா’, ‘என் அண்னன்’, ‘ஞான ஒளி’ போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர்
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 44 படங்களை இயக்கியுள்ளார். அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றதோடு கடந்த 2002ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இடம்பெற்றார்.
தெலுங்கு சினிமாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கடந்த 2008ம் ஆண்டு ரகுபதி வெங்கையா விருதினைப் பெற்றார். சிவாஜி கணேசனை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவரது முதல் கணவர் கிருஷ்ண மூர்த்தி மூலமாக நரேஷ் என்கிற மகன் பிறந்தார். நரேஷ் தற்போது நடிகராக இருக்கிறார். பின்னர், முதல் கணவரை விவாகரத்து செய்து, தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவை மணந்து கொண்டார். இவர்களுக்கு
மகேஷ் பாபு என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது