கிரிக்கெட்டை அடுத்து குத்துச்சண்டையில் களமிறங்குகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘கனா’ படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ‘சதுரங்க வேட்டை 2’ படத்தினை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து சர்வதேச அளவில் குத்துச்சண்டை வீராங்கனையாக வளரும் ஒரு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.